விழுப்புரம்: அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு

542பார்த்தது
விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளராக சி. வி. சண்முகம் விடுவிக்கப்பட்டு, புதிய செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவி வந்த அலுவலகச் சாவி சர்ச்சை, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. அதன்படி, கட்சி அலுவலகத்தின் சாவி புதிய செயலாளர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அலுவலகத்திற்கு வருகை தந்த பசுபதி, அங்குள்ள பேனர்களை மாற்றி, கட்சி கொடியை ஏற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி