விழுப்புரம் அதிமுக அலுவலக உரிமை: RDO தலைமையில் சமாதானகூட்டம்

3பார்த்தது
தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார். இதனால், கட்சி அலுவலகத்தை உரிமை கோருவதில் அவருக்கும் முன்னாள் மாவட்ட செயலாளர் சி. வி. சண்முகம் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சி. வி. சண்முகம் தரப்பினர் 20 ஆண்டுகால வரி ரசீதுகளையும், அலுவலகம் 'வி. கே. சசிகலா புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அறக்கட்டளை' பெயரில் உள்ளதற்கான பட்டாவையும் சமர்ப்பித்து, புதிய செயலாளர் உரிமை கோர முடியாது என வாதிட்டனர். இதுகுறித்து பசுபதி தரப்புடன் பேசி அறிவிப்பதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you