விழுப்புரம்: பள்ளி ஆசிரியையிடமிருந்து செயின் பறிக்க முயற்சி

2பார்த்தது
விழுப்புரம்: பள்ளி ஆசிரியையிடமிருந்து செயின் பறிக்க முயற்சி
விழுப்புரம் இந்திரா பிரியதர்ஷிணி நகரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பத்மாவதி, பணி முடிந்து வீடு திரும்பும்போது, தந்தை பெரியார் நகரில் மர்ம நபர்கள் அவரிடமிருந்த 6 சவரன் தங்க தாலியை பறிக்க முயன்றனர். அவர் சங்கிலியை விடாமல் பிடித்து கூச்சலிட்டதால், மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி