விழுப்புரம்: மின் இணைப்புக்கு லஞ்சம்; வணிக ஆய்வாளர் கைது

0பார்த்தது
விழுப்புரம்: மின் இணைப்புக்கு லஞ்சம்; வணிக ஆய்வாளர் கைது
சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஹரிகிருஷ்ணன், ரெட்டணை கிராமத்தில் வீடு கட்ட மனை வாங்கி, தற்காலிக மின் இணைப்பு கோரி  துணை மின் நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரேகா, மின் இணைப்பு வழங்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் அவரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி