விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 21.02.2026 அன்று திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் (21.02.2026, சனிக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அவசர அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்துச் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அன்றைய தேதியில் ஏற்கனவே இறுதித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தால், அந்தத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் நடைபெறும்.