விழுப்புரம்: அதி வேகமாக பைக் ஓட்டிய நான்கு பேர் கைது

0பார்த்தது
விழுப்புரம்: அதி வேகமாக பைக் ஓட்டிய நான்கு பேர் கைது
விழுப்புரம் நகராட்சி மைதானம் அருகே டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், அதிவேகமாக பைக் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய விஜயதமிழன், ஏழுமலை, வசந்தகுமார் ஆகியோரிடம் இருந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் அத்தியூர் திருக்கை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு, அதிவேகமாக யமஹா பைக் ஓட்டிய ராம்குமார் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் அதிவேக வாகன சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி