சம்பளம் வழங்க கோரி விழுப்புரம் நகராட்சி பணியாளர்கள் தர்ணா.

158பார்த்தது
விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் 29 குடிநீர் விநியோக ஊழியர்கள், மே மாத சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து நகராட்சி அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் குடிநீர் கட்டணம் வசூலித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும், பொதுமக்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க கூறுவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இரண்டு நாட்களில் முறையான சம்பளம் வழங்கப்படாவிட்டால் விழுப்புரம் முழுவதும் குடிநீர் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி