விழுப்புரம்: மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (25).திருமணமாகாதவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனராம். இதனால், மன விரக்தியில் இருந்து வந்த ஸ்ரீதர் சம்பவதினத்தன்று இரவு தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.