போளூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (32), அவரது நண்பர் மணிவண்ணன் ஆகியோர் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அதிவிரவு ரயிலில் சென்றனர். ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் இடது கால் நடைமேடையில் மோதி பலத்த காயமடைந்தது. உடனடியாக அவர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் உதவியுடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.