விழுப்புரம் காவல்துறை புதுமை வழக்குநிலை அறிக்கைநேரில்வழங்கல்

2பார்த்தது
விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழகத்தில் முதல்முறையாக, வழக்கு தொடர்பாக புகார் அளித்தவர்களுக்கு அதன் நிலை மற்றும் விசாரணை முடிவுகள் குறித்த தகவலைத் தெரிவிக்கும் வகையில் "இறுதி அறிக்கை" (FORM 96) நேரில் வழங்கும் புதிய சமூகநேய நடைமுறையை இன்று தொடங்கியுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க் IPS அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் திருமதி. உமா IPS அவர்களின் மேற்பார்வையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க நாளாகிய இன்று, மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் புலனாய்வு முடிக்கப்பட்ட 49 வழக்குகளின் இறுதி அறிக்கைகள் புகார்தாரர்களுக்கு நேரில் வழங்கப்பட்டன. இனி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை முதல் மாலை வரை இந்த நடைமுறை தொடரும்.

தொடர்புடைய செய்தி