விழுப்புரம் மாவட்ட மாணவர் V. பவன் குமார், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நடைபெற்ற 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, அணிச் சாம்பியன்ஷிப் மற்றும் தனிநபர் ஜூனியர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். நவம்பர் 1 முதல் 4 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் இரண்டு கோப்பைகளையும் வென்ற பவன் குமார், விழுப்புரம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று வரும் இவர், தற்போது இந்தியாவின் நம்பர்-1 ஜூனியர் தேசிய கேரம் சாம்பியனாக உயர்ந்துள்ளார்.