விழுப்புரம்: குட்கா கடத்தல்.. மூவர் கைது

705பார்த்தது
விழுப்புரம்: குட்கா கடத்தல்.. மூவர் கைது
காணை அருகே சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பொருட்களைக் கடத்திச் சென்ற கணேசன் (37), சத்தியராஜ் (41), விநாயகன் (55) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டன. அவர்களிடமிருந்து ₹1.40 லட்சம் மதிப்புள்ள 115 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.