விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு முன்பதிவில்லாத மெமு ரயில் மே 31 ஆம் தேதி இயக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். பின்னர், திருவண்ணாமலையிலிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும். வெங்கடேசபுரம், மாம்பலபட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.