விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் பேசாமல் தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்வதாகவும், வசைபாடுவது நாளும் தொடர்வதாகவும் கூறினார். கட்சி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இரண்டு முறையும் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், எதிர்தரப்பு தொடர்ந்து வழக்கு பதிவு செய்வது வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.