விழுப்புரம்: வழிபறி வழக்கில் இருவருக்கு 3 வருடம் சிறை

3பார்த்தது
விழுப்புரம்: வழிபறி வழக்கில் இருவருக்கு 3 வருடம் சிறை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் 2017 மே 21 அன்று நடந்த வழிப்பறி வழக்கில், அரசு டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 4,37,592/- பறித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகுமார் (31) மற்றும் ஜெயபிரகாஷ் (28) ஆகிய இருவருக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் பாரதி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். விக்கிரவாண்டி காவல் நிலைய அதிகாரி ஆறுமுகம் விசாரணை நடத்தினார்.