கிரேடு வழங்குதல் மற்றும் 40 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 3வது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், உதவியாளர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சென்னை நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 52 கிராம உதவியாளர்களை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.