விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்டம்பாக்கம் ஊராட்சியின் துணைத் தலைவர் பிருந்தாவதி சுரேஷ், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் உள்ள பெயர்ப் பலகையில் தனது பெயர் மட்டும் பலமுறை அழிக்கப்பட்டதாகக் கூறி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இந்த பாகுபாடு நடந்திருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் செயல் குறிவைத்து நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.