விழுப்புரத்தில் வள்ளலார் சத்தியதருமச் சாலையில் 1000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 1000 நபர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் மக்கள் நலத்திட்டம் இன்று (மே.25) நடைபெற்றது. 20.05.2026 முதல் 24.05.2026 வரை 5 நாட்கள் டோக்கன் பெற்ற பயனாளிகளுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. வள்ளலார் சத்தியதருமச்சாலை நிறுவனர் ஜெய.
அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். நலத்திட்ட உதவிக்கு அப்ரைசர் பெ.சிவக்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் முன்னாள் நகர சேர்மன் இரா. ஜனகராஜ் மகன் அருண் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.