வானூரில் 1050 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிய பெண் கைது

582பார்த்தது
வானூரில் 1050 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிய பெண் கைது
வானூர் வட்டம், நாவற்குளம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் அஞ்சலை என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். புதுச்சேரி மாநில சாலையோரக் கடைகளில் இட்லி மாவாக விற்பனை செய்வதற்காகப் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ (21 மூட்டைகள்) ரேஷன் அரிசியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அஞ்சலையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி