திண்டிவனம் சலவாதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நவநீதம் (50) என்பவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.