திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கௌசல்யா(34) என்பவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.