விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலிருந்து பேருந்தில் சென்ற அஞ்சுலட்சம் (38) என்பவரின் மணிபர்சை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் திருடியுள்ளார். அதில் இருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் ₹500 ரொக்கம் திருடு போனது. கண்டாச்சிபுரம் தாலுகா கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த இவர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.