சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம்மோதி தொழிலாளி உயிரிழப்பு

0பார்த்தது
விழுப்புரம் அருகே வி.பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர், புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் பணி முடிந்து மதுபோதையில், ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி வந்துள்ளார். அப்போது, பெரியார்நகர் ஆவின்பாலகம் அருகே திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புக்கட்டையில் மோதி மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு, மின்கம்பத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக வந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி