விழுப்புரம்: கஞ்சா பொட்டலங்கள் பதுக்கல்; இளைஞா் கைது

71பார்த்தது
விழுப்புரம் அடுத்துள்ள அயினம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான காவலர்கள், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அயினம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகமணி மகன் நவீன்குமார் (25), தனது வீட்டின் அருகே விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி