விழுப்புரம் பானாம்பட்டு ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் (27) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டைச் சேர்ந்த பிரதாப், கடந்த 18-ம் தேதி விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே மஞ்சுளா என்பவரிடம் 6 பவுன் நகையைப் பறித்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பிரதாப்பைக் கைது செய்து, மீதமுள்ள 10 கிராம் நகை, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.