விழுப்புரம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைராஜா தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ராஜேஷ்குமார் (29) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் கடந்த 25-ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து என்பவரிடம் ஒரு செல்போனையும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த முருகையா என்பவரிடம் 2 செல்போன்கள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.