இளைஞர் தாக்கப்பட்ட அவமானத்தில் தூக்கு போட்டு உயிரிழப்பு

2பார்த்தது
விழுப்புரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற ரஜினி (18) மீது மூன்று பேர் மோதி தாக்கியதாக அவரது தந்தை செம்மனேரி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலின் அவமானத்தைத் தாங்க முடியாமல் ரஜினி வீட்டில் மின்விசிறியில் புடவையால் தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மூவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி