
100 நாள் வேலைத் திட்ட முறைகேடு: பொதுமக்கள் தர்ணா
விழுப்புரம் மாவட்டம் ஆனங்கூர் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் லஞ்சம் கேட்பதாகக் கூறி, பணம் தர மறுத்த மக்களுக்கு வேலை வழங்கப்படாததைக் கண்டித்து, பாரதிய கிசான் சங்கத் தலைவர் பாபு தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.


























