2024-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் 83,000 பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 60% பேர் தங்கள் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தினமும் சராசரியாக 137 பெண்கள் வன்முறைக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. பாலின சமத்துவமின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் இணைய பயன்பாடு போன்ற காரணங்களால் இந்த பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.