தமிழ் சினிமாவில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.