மெக்சிகோவில் வன்முறை: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

4399பார்த்தது
மெக்சிகோவில் வன்முறை: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதால் வெடித்துள்ள வன்முறையை அடுத்து, அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜாலிஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மற்றும் வாகன எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசர காலங்களில் 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும், இருப்பிடம் குறித்த தகவலை உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி