திருப்பதியில் 14, 17ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

9பார்த்தது
திருப்பதியில் 14, 17ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
வரவிருக்கும் தொடர் திருவிழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இம்மாதம் 14 மற்றும் 17ஆம் தேதிகளில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுவதால், விஐபி பிரேக் தரிசனம் கிடையாது. மேலும், 17ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சில சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி