மும்பையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தெருக்கள், முக்கிய சாலைகள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை மழை நீர் புகுந்து மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், 2 நபர்கள் சுற்றியுள்ள வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், ஜாலியாக அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.