கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 104 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விராட் கோலி, புதிய சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கின் போது அதிக சதங்கள் (3 சதங்கள்) விளாசிய ஜோஸ் பட்லரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். 193 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி, கோலியின் அதிரடியால் 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது.