ஐபிஎல் தொடரில் SRH அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி தோல்வி அடைந்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு விராட் கோலி கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக RCB அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே மைதானத்தில் டிராவிஸ் ஹெட்டுடன் கோலிக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், ஸ்லெட்ஜிங் மோதலும் ஏற்பட்டது. இந்நிலையில், போட்டி முடிவடைந்த பின் டிராவிஸ் ஹெட் கையை நீட்டியும், விராட் கோலி அவரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு நேராக நடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.