ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி டி20
கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய உலக சாதனையை முறியடித்துள்ளார். இப்போட்டியில் தனது புதிய ஓப்பனிங் பார்ட்னரான வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக முறை (211 முறை) 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்ட வீரர் என்ற வரலாற்று மைல்கல்லை அவர் எட்டினார்.