
'மண்டாடி' படம் ரூ.1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் பேச்சு
சூரி நடிப்பில், மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் படகுப்போட்டியை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆக.29) நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், சூரியின் கடின உழைப்பை பாராட்டியதுடன், இப்படத்தை சீனாவில் வெளியிட்டால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படம் செப்.10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





























