
போலி பத்திர பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி பொதுமக்கள் மனு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சுழி அருகே இசலி ஊராட்சிக்கு மேலகுமிழங்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலகுமிழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் வீடுகள் போன்ற சொத்துக்கள் இசிலி கிராமத்தை சேர்ந்த இரண்டு தனி நபர்களின் பெயருக்கு மாறியதாக கூறப்படுகிறது. தனி நபரின் பெயருக்கு மாறியதாக புகார் தெரிவித்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்
























