சாலை நடுவே உள்ள தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, குற்றாலம் சென்று திரும்பிய நான்கு இளைஞர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முத்துராமலிங்கம் (30) மற்றும் கண்ணன் (28), சபரி கண்ணன் (20), பவிராஜ் (29) ஆகிய நான்கு பேரும் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தனர். ஏர் பேக் இருந்ததால் உயிர் தப்பிய இவர்கள், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் இருந்து புகை வந்ததால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி