சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமபந்தி விருந்தும் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி