விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஆப்செட் உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் அவரது உதவியாளர் கார்த்திகேயன் (46) உட்பட மூன்று பேர், சாத்தூரிலிருந்து திருவனந்தபுரம் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது, கார்த்திகேயன் படிக்கட்டில் இருந்து தவறி பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சாத்தூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.