தமிழக வெற்றி கழகம் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் விழாவை துவக்கி வைத்தார். பெண்கள் குலவையிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து நடைபெற்ற கோலப்போட்டியை மகளிரணி அமைப்பாளர் ஜெயமணி துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்று வண்ணக் கோலங்கள் வரைந்தனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பலர் கலந்துகொண்டனர்.