விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கடந்த ஏழு வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்றுமுன்தினம் (செப்.28) பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதில் அவர் உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.