அதிமுக சார்பில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை சார்பில் கிராமத்து இளைஞர்களுக்கான நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவிக்கும் வகையில், ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பந்தல்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 28 கிராமங்களைச் சேர்ந்த அணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.