அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தம்மாந் தெரு, கீழப்பட்டி தெரு, வடுகர் கோட்டை, அம்மன் கோவில் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வெற்றி வேட்பாளர் சோலை சேதுபதி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அந்தப் பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து பூ கட்டி கொடுத்து நூதன முறையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.