அருப்புக்கோட்டையில் பேரரசு பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் சதயவிழாவை முன்னிட்டு,
அஇஅதிமுக சார்பில் செம்பட்டி மற்றும் பாளையம்பட்டியில் உள்ள முத்திரையர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், நகர செயலாளர்
சேதுபதி, அவைத்தலைவர் அசோக்வேல்ச்சாமி, வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைசெயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சவுண்டையன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் பந்தல்குடி பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.