விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், குடிப்பழக்கத்தால் குடும்பப் பிரச்சினைகளைச் சந்தித்து வந்த ராஜ கருப்பசாமி என்பவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.