விருதுநகர் அருகே கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயது மாயக்கண்ணன், குடும்பப் பிரச்சனை காரணமாக அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் உள்ள சகோதரி கீதா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் அருகில் உள்ள கலக்கிடங்கில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.