பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கிய ஆட்சியர்

3பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் நிதியாண்டின் புதிய கல்வியாண்டைத் தொடங்கும் வகையில், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா நேரில் துவக்கி மாணவர்களுக்கு வழங்கினார்.