விருதுநகர் மாவட்டத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்களுக்கு 4-ஆவது விருதுநகர் புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தக அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆண்டு "அறிவும் வளமும்" என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியில் தொல்லியல் துறை, அறிவரங்கம், பசுமை அரங்கு, புத்தக நன்கொடை அரங்கு போன்ற பல்வேறு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.